newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Saturday 25 October 2014

மருதையாற்றின் 5 இடங்களில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை



பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மருதையாற்றின் நீரை சேமிக்க 5 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மருதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது 700 மில்லியன் கனஅடி நீர் மருதையாற்றின் மூலம் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து கடலில் கலந்து வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மருதையாற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக மருதையாற்று உபகோட்ட உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை எனக் குறிப்பிட்டார்.


பெரம்பலூர் மாவட்டம் பச்சமலையில் தொடங்கி, அரியலூர் மாவட்டம் வழியாக 71 கிலோ மீட்டர் பயணித்து, தூத்தூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மருதையாற்று தண்ணீர் கலக்கிறது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை நம்பியே மானாவாரி பயிரிடுதலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment