newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Saturday 27 December 2014

அரியலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் 82 பேர் மீது வழக்குகள் பதிவு




அரியலூர்: 27.12.2014


அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 30 பேர் ,மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக 26 பேர் , மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 10 பேர், செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியதாக 8 பேர், அதிக வேகமாக சென்றதாக 4 பேர், அதிக உயர பாரம் ஏற்றியதாக 2 பேர் , ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததாக 2 பேர் உள்பட மொத்தம் 82 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

50 மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


ஜெயங்கொண்டம்: 27.12.2014

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 பேர் மாதந்தோறும் வழங்கி வந்த மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்தும், தொடர்ந்து உதவி தொகை வழங்கக்கோரியும் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் திருமாறன் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு மாற்றுத்திறநாளிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டத்தில் வழிப்பறி - 3 பேர் கைது



ஜெயங்கொண்டம்: 27.12.2014

ஜெயங்கொண்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் கைது

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசார் நேற்று அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், கடலூர் மாவட்டம் மோவூர் பகுதியை சேர்ந்த கோமேத கண்ணன் (வயது 26), தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் (42), திருபுவனம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) என்பதும், அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமேத கண்ணன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைக்கேல்ராஜ் பாபநாசம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு பதிவை இழந்தவர்கள் புதுப்பித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு

அரியலூர்: 27.12.2014
அரியதோர் வாய்ப்பு, வேலைவாய்ப்பு பதிவை இழந்தவர்கள் புதுப்பித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு.

2011, 2012, 2013 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி 2011, 2012, 2013 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு  பதிவை இழந்தவர்கள் தங்கள் அடையாள அட்டையுடன் வந்து மார்ச் 7 ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆதார் எண்ணை கேஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதா? இணையம் மூலம் அறியலாம்.


அரியலூர் : 27.12.2014


உங்களின் ஆதார் எண், சமையல் எரிவாயு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா...?
இணையத்தில் நேரடியாக தெரிந்துக்கொள்ளலாம். உங்கள் காஸ் நிறுவனம் எது என்பதை அறிந்துகொண்டு கீழே உள்ள LINK -  CLICK செய்யுங்கள்....











 
 
                                        
 








Friday 26 December 2014

செந்துறை அருகே பெண் தற்கொலை - ஊராட்சி தலைவர் கைது

 செந்துறை: 26.12.2014

செந்துறை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.



தூக்கில் பெண் பிணம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வஞ்சினபுரத்தை சேர்ந்தவர் வீரமணி(வயது 29). இவருக்கும் அருகில் உள்ள ஆனந்தவாடியை சேர்ந்த ரஞ்சிதாவுக்கும்(19) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆன நிலையில் கடந்த 13.6.2014 அன்று ரஞ்சிதா மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து ரஞ்சிதாவின் தாய் தனக்கொடி மற்றும் உறவினர்கள் ரஞ்சிதாவின் மர்ம சாவு குறித்து செந்துறை போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார், ரஞ்சிதாவின் கணவர் வீரமணி மற்றும் வீரமணியின் தாயார் கருப்பாயி(43), தந்தை ராஜலிங்கம்(50), சகோதரர் ராஜ்குமார் (25) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். தனக்கொடி கொடுத்த புகாரில், தனது மகள் ரஞ்சிதாவின் சாவுக்கு காரணமானவர்களுக்கு வஞ்சினபுரம் ஊராட்சி தலைவர் தனபால் உடந்தையாக இருந்தார் என்றும், தனது மகளை சாதி பெயரை சொல்லி திட்டினார் என்றும் கூறியிருந்தார்.

ஊராட்சி தலைவர் கைது


இந்த புகார் தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் கருணாகரன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், கோட்டாட்சியர் கருணாகரன் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் பேரில் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் ஊராட்சி தலைவர் தனபாலை அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தார்.

Wednesday 10 December 2014

அரியலூரில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி

அரியலூர்:10.12.14


அரியலூரில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை  கலெக்டர் சரவணவேல்ராஜ்  தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

மனித உரிமைகள் உறுதிமொழி

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மனித உரிமைகள் தினத்தையொட்டி, அனைத்துத்துறை அலுவலர்கள் மனித உரிமைகள் நாள் உறுதி மொழியினை ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் சரவணவேல்ராஜ்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நான், இந்திய அரசமைப்பு சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு, செயல் படுத்தப்படுகின்ற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும், பாதுகாக்கப்படுகிற அனைத்து மனித உரிமைகளின்பால் உண்மையான மாறாத பற்றுறுதி மிக்கவனாக இருப்பேன். அந்த உரிமைகளை பாதுகாப்பதற்கான என்னுடைய அலுவல்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மற்றவர்களும் வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி ரவீந்திரன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சடையப்ப விநாயகமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முஸ்தபா கமால் பாட்ஷா (பொது), செந்தில் குமரன் (வளர்ச்சி), சோமசுந்தரம் (கணக்குகள்), இணை இயக்குநர் (வேளாண்மை) குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, துணை இயக்குநர் (தோட்டக் கலை) சுப்பையா, அலுவலக மேலாளர்கள் குணசேகரன் (பொது), ஸ்ரீதரன் (குற்றவியல்) மற்றும் வருவாய்துறை, வளர்ச்சித் துறை, வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.