newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Monday 27 October 2014

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களில் 8பேரின் பெயர்கள் வெளியீடு

வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களில் 8 பேரின் பெயர்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் டாபர் குழுமத்தின் பிரதீப் பர்மன், கோவாவை மையமாகக் கொண்ட சுரங்கத் தொழிலதிபர் ராதா எஸ். டிம்ப்ளோ, பங்கு வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோத்யா மற்றும் இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் 5பேர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி உள்ளவர்கள் பற்றிய தகவல்களை தர அந்நாட்டு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

அரியலூர் செட்டி ஏரியை கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு



அரியலூர்:26.10.2014


அரியலூரில், பஸ் நிலையம் அருகில் உள்ள செட்டி ஏரியின் மேம்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செட்டி ஏரி

அரியலூர் மாவட்டம், அரியலூரில் பஸ் நிலையம் அருகில் உள்ள செட்டி ஏரி ஏற்கனவே தமிழக அரசின் 2012-13-ம் ஆண்டு தன் னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.96 லட்சம் மதி¢ப்பில் சீரமைப்பு மற்றும் அழகு படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அரியலூர் நகராட்சிக்குட் பட்ட இந்த ஏரி 7.45 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்குள்ள சுற்றுச்சுவர், குழந்தைகள் பூங்கா, நடை பாதை ஆகியவை சீரமைக் கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த ஏரியில் கரையோரம் தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்தும், போதிய மின் விளக்கு வசதிகள் செய் வது குறித்தும், கரையோரங்களில் உள்ள செடிகள் நிறைந்த புதர்களை அகற்றி தூய்மை படுத்துவது குறித்தும் மற்றும் ஏரியில் உள்ள சிறப்பு வாய்ந்த பூங்கா மற்றும் நடைபாதை களை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கலெக்டர் சரவண வேல்ராஜ் அலுவலர் களுடன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பா.ரவீந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயக மூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தில்குமரன், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் வைத்தியநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Saturday 25 October 2014

அரியலூர் ரெயில் நிலையம் அருகே இறந்து கிடந்தவர் யார்? போலீசார் விசாரணை



அரியலூர் அருகே கல்லக்குடி ரெயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத ஒரு  ஆண்  இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவருக்கு சுமார் 50 வயது இருக்கும்.  அவரது சட்டை பையில் 24–ந் தேதி கல்லக்குடியில் இருந்து அரியலூருக்கு வருவதற்கான ரெயில் டிக்கெட் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருதையாற்றின் 5 இடங்களில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை



பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மருதையாற்றின் நீரை சேமிக்க 5 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மருதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது 700 மில்லியன் கனஅடி நீர் மருதையாற்றின் மூலம் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து கடலில் கலந்து வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மருதையாற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக மருதையாற்று உபகோட்ட உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை எனக் குறிப்பிட்டார்.


பெரம்பலூர் மாவட்டம் பச்சமலையில் தொடங்கி, அரியலூர் மாவட்டம் வழியாக 71 கிலோ மீட்டர் பயணித்து, தூத்தூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மருதையாற்று தண்ணீர் கலக்கிறது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை நம்பியே மானாவாரி பயிரிடுதலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


Tuesday 21 October 2014

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. சென்னையில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பெய்த கனமழையால் நட்சத்திர ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நல்லதங்காள் ஓடை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை ஒட்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் மூன்றாவது நாளாக குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
 
புதுச்சேரியில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை உடைந்ததால் தண்ணீர் வீணாகுவது மட்டுமில்லாமல், ஆற்றை கடக்க முடியாமல் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் குமுளி, தேக்கடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127.40 அடியாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்திற்குப் பாசனத்திற்காக ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கத்தி’ பட விவகாரம்: சென்னை சினிமா தியேட்டரில் தாக்குதல்


சென்னை:22.10.2104



நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படவிவகாரம் தொடர்பாக சென்னையில் திரைஅரங்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் குண்டுகள் வீச்சு

நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ திரைப்படம் இன்று (புதன்கிழமை) தீபாவளி தினத்தையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

கத்தி படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் பினாமி நிறுவனம் என்றும், லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழ் அமைப்புகள் ஏற்கனவே அறிவித்து இருந்தன.

இந்த நிலையில் கத்தி படம் திரையிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த சென்னை சத்யம் மற்றும் உட்லண்ட்ஸ் திரை அரங்குகள் மீது, நேற்று முன்தினம் நள்ளிரவு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. சத்யம் திரை அரங்கில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. உருட்டு கட்டையாலும், திரை அரங்கின் அலங்கார கண்ணாடிகளை உடைத்தார்கள். உட்லண்ட்ஸ் திரை அரங்கு மீது கல்வீசி தாக்குதல் நடந்தது.

5 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக சத்யம் திரை அங்கின் துணை மேலாளர் நிர்மல் குமார், அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அண்ணாசாலை போலீசார் இந்த புகார் அடிப்படையில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வெடிபொருட்கள் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவைச் சேர்ந்த அப்பு (வயது 32), ஜெயக்குமார் (25), கிருஷ்ணன் (20), வாசுதேவன் (28), ஜெயப்பிரகாஷ் (27) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நீதிமன்ற காவலில் இவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தனி வழக்கு

உட்லண்டஸ் திரை அரங்கு மீது தாக்குதல் நடத்திய வழக்கில், அந்த தியேட்டரின் மேலாளர் வெங்கடேசன் கொடுத்த புகார் அடிப்படையில், ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, அப்பு என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும், கத்தி படம் திரையிடப்பட்டுள்ள திரை அரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீபாவளி பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று இரவில் இருந்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். சென்னையிலும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், விபத்தில்லாத, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட, பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி




அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

அரியலூர்

இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியில் இருந்தபோது வீர மரணம் அடைந்த தமிழ கத்தை சேர்ந்த போலீசார் உள்பட இந்தியா முழுவதும் 642 போலீஸ் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் நடை பெற்றது. 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் மறைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமை தாங்கி வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோ, செல்லதுரை, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அரியலூர் ஸ்ரீதரன், ஜெயங்கொண்டம் வின் சென்ட், மாவட்ட குற்ற பிரிவு மற்றும் பதிவேடுகள் கணேசன், ஆயுதப்படை சங்கர நாராய ணன், அசோக் குமார் (பயிற்சி) ஊர்க்காவல் படை தளபதி ராஜன், ஆகி யோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினர். அதன் பின்பு ஆயுதப் படை போலீசார் அணி வகுப்பு செய்து குண்டுகள்முழங்க மரியாதை செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் பணியின்போது இறந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களின் பெயர்களை வாசித்தார். அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச் சியின்போது அனைவரும் சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில், நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா தலைமை தாங்கி ஆயுதப்படை வளா கத்தில் அமைக் கப்பட்டி ருந்த நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து உயிர்நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து குண்டுகள் முழங்க அணி வகுப்பு மரியாதை செலுத் தப்பட்டு உயிர்நீத்த வர்களுக் காக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட தலைமை இட கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், மதுவிலக்கு அமல்பிரிவு துணை சூப்பி ரண்டு சந்திர சேகரன், துணை சூப்பிரண் டுகள் சந்தான பாண்டியன், சுருளி யாண்டி, கோவிந்த ராஜ், போலீஸ் இன்ஸ்பெக் டர்கள் கோபாலசந்திரன் (தனி பிரிவு), ஜாகிர் உசேன் (மாவட்ட ஆயுதப்படை), செந்தில்குமார், சிவசுப் ரமணியன், பிரகாஷ், ரவிசக் கரவர்த்தி, சிவராஜ் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண் டனர்.

ஆசிரியர்களுக்கு கணித பயிற்சி

அரியலூர்:22`10`2014
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டார வளமையத்திற்கு உட்பட்ட 83 பள்ளிகளில் இருந்து 93 தொடக்கநிலை ஆசிரி யர்களுக்கு கணித அடிப்படைத்திறனை வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கணித உபகரணப் பெட்டி யைப் பயன்படுத்தி கணித அடிப்படை செயல்பாடு களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிதத்தை எளிமை யான முறையில் கற்பித்தல் திறன் பயிற்சி 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப்பயிற்சியை வட்டார வள மைய மேற்பார் வையாளர்(பொறுப்பு) குறிஞ்சிதேவி தொடங்கி வைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இளங்கோவன், இராசாத்தி, முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் அனைவ ருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர் கணேசன் பார்வையிட்டு பேசினார். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக கலாமாலினி, குணசேகரன், சுப்பிரமணியன், மதியழகன், ரமேஷ், ஆகியோர் பயிற்சி அளித் தனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர் பயிற்றுநர்களான செல்வகுமார், இளையராஜா, சத்தியபாமா, முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியலில் இனி ஆன்–லைனில் பெயர் சேர்க்கலாம் : பிரவீன்குமார்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள இணையதள வசதியை உபயோகப்படுத்த வேண்டும் என்று  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், வாக்காளர் பட்டியலை திருத்தும் முறை அக், 15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1.1.15 அன்று வரை 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள், வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ளலாம். 
 
இதற்கு ஆன்லைன் எனப்படும் இணையதள சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பெயர் சேர்ப்பு மட்டுமல்ல, பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றையும் செய்யலாம். 
 
www.elections.tn.gov.in/eregistration என்ற இணையதளத்தில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆன் லைன் பதிவு வசதிக்காக, இணையதள மையங்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளோம் இவற்றில் ஏதாவது ஒரு மையத்துக்குச் சென்று அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
மேலும், சென்னை தாலுகா அலுவலகங்களில் உள்ள அரசு பொது இ–சேவை மையங்களில் இந்த வசதிகள் உள்ளன. குறிப்பிட்ட சில தொகையை செலுத்தி இந்த ஆன்லைன் வசதியை விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். அவரவர் தங்கள் சொந்த கனிணி அல்லது லாப் டாப்பையும் இதற்காக பயன்படுத்த முடியும் என்றார்.

பாரத ரத்னா'வை இழிவுபடுத்துகிறார் சுப்பிரமணியன் சுவாமி: இந்திய கம்யூனிஸ்ட் கண்டிப்பு



இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியிருப்பது, அவ்விருதை இழிவுபடுத்தும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.

தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காக போர் விதி மீறல்களை மீறிய - மனித உரிமைகளை நசுக்கிய காரணங்களுக்காக போர்க் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவுபடுத்துவதாக ஆகும்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித வாழ்வுரிமைகளைப் பறிக்கவும், இனத்தைக் கொன்றழிக்கத் தூண்டும் குற்றத்திற்காகவும் இந்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச் செயலர் வைகோவும், பாமக நிறுவனர் ராமதாஸும், இந்தப் பிதற்றல்களைக் கேட்ட பிறகும் பாஜகவுடன் உறவு பற்றிப் பேசுவதை நிறுத்தி, ஈழத்தமிழ் மக்களின், இந்தியத் தமிழக மீனவர்களுக்கும் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தர, தமிழ் எதிரிக் கூட்டத்திலிருந்து, விலகி, தமிழ் மக்களைத் திரட்ட முன்வர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம்" என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், "பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தமிழ் நாட்டில் சாதிக் கலவரங்களைத் தூண்டி விடும் நோக்கோடு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், சுதந்திரப் போராட்ட கால தியாகத்தைப் பாராட்டி, அதன் அடையாளமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் மறைந்த பல்லாண்டுகளுக்குப் பிறகு, துதிபாடுகிற சாக்கில் சாதியத் தீயை மூட்டி விட முயல்கிறார். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதுடன், இவரது மாய்மாலப் பிரச்சாரத்திற்கு தமிழக மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம்" என்று அவர் கேடுக்கொண்டுள்ளார்.

அரியலூரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்.



அரியலூர் நகரில் அனும தியின்றி பல்வேறு கடை களில் பட்டாசுகள் விற்பனை செய் யப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி கலெக் டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் தாசில்தார் வைத்தியநாதன், மற்றும் அலு வலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பறிமுதல்

அப்போது அரியலூர் சின்னகடை வீதியில் உள்ள ஒரு கடையில் அனுமதியின்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத் திருந்தது தெரிய வந்தது.

ரூ.3 லட்சம் மதிப்பிலான அந்த பட்டாசுகளை அலுவ லர்கள் பறிமுதல் செய்த னர்.

குற்றவியல் நடவடிக்கை

இது குறித்து உதவி கலெக்டர் சந்திரசேகர் சாக மூரி கூறும் போது, உரிய அனுமதியின்றி பட்டாசு களை யாரும் விற்பனை செய்ய கூடாது என்று பல் வேறு முறைகளில் கடை களின் உரிமை யாளர் களுக்கு அறிவுரை     வழங்கப்ப ட்டுள் ளது. ஆனால் ஒரு சில கடைகளின் உரிமையாளர்கள் அதனை பொருட்படுத்தாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்துள்ளனர். இது போல் பதுக்கலில் ஈடுப டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மீன்சுருட்டி அருகே வீட்டின் மீது மரம் விழுந்து கணவன்-மனைவி உள்பட 4 பேர் காயம்

அரியலூர்:21.10.2014


மீன்சுருட்டி அருகே வீட்டின் மீது மரம் விழுந்து கணவன்- மனைவி உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டி அருகே உள்ள ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35) நெசவு தொழி லாளி. இவரும், இவரது மனைவி கல்பனா (28) . மகன் கோகுல் (5). பாஸ்கரின் தங்கை மகள் மோனிஷா (7) ஆகிய 4 பேரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வீட்டின் அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரம் வீட்டின் மீது விழுந்தது. இந்த நிலையில் வீட்டில் படுத்து இருந்த 4 பேர் மீதும் ஓடுகள் நொறுங்கி விழுந்தது. இதில் அவர்கள் லேசான காயம் அடைந்த னர். இதையடுத்து 4 பேரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் வீட்டின் மீது விழுந்த மரம் கயிறு கட்டி அகற்றப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ரெட்டி பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சென்று விசாரணை மேற் கொண்டனர்.

Monday 20 October 2014

அரியலூரில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெடி பொருட்களையும் பறி முதல்


தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர் சகாமூரி தலைமை யில் உணவு பாதுகாப்பு துறை செயல் அலுவலர் செல்வராஜ் மேற்பார்வையில் அரியலூர் பேருந்து நிலையம், எம்.பி. கோவில் தெரு, சின்னக்கடைதெரு, சத்திரம், மாதா கோவில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலுள்ள பெட்டிக்கடை, மளிகைகடைகளில் அதிகாரி கள் ஆய்வு செய்தனா.

இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் தடைசெய்யப் பட்ட பொருட்களை விற் பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை செய்தனர்.

இதை தொடர்ந்து அரியலூர் பகுதி யில் உரிமம் இல்லாமல் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெடி பொருட் களையும் அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா அரியலூர் உதவி கலெக்டர் வழங்கினார்


அரியலூரில் ஆக்கிரமிப்பின் போது வீடுகளை இழந்த 21 பேருக்கு மாற்று இடத்தில் வீட்டுமனைப் பட்டாக் களை அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரியலூர் செந்துறை சாலையிலுள்ள நீர்நிலை புறம்போக்கில் இருசுகுட்டை யில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையிலான வருவாய் துறையினர் கடந்த 12-ந் தேதி பொக்ளின் எந்திரம் மூலம் அகற்றினர். இதில் வீடுகளை இழந்த அப்பகுதி மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.

இலவச வீட்டு மனைப்பட்டா

இதையடுத்து உதவி கலெக் டர் சந்திரசேகர் சாகமூரி 21 பேருக்கு மாற்று இடத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட் டாக்களை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் அரியலூர் தாசில் தார் வைத்தியநாதன், நேர்முக உதவியாளர் தண்ட பாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Sunday 19 October 2014

தமிழர்களுக்கு ஆதரவான நிலை வகிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது ராஜபக்சே தாக்கு

கொழும்பு:20.10.2014 
என்னை ஆட்சியில் இருந்து நீக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுடன் இணைந்து பணிபுரிகின்றது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தாக்கி பேசியுள்ளார்.

கொழும்புவில் சுகாதாரத் துறை ஊழியர்களிடம் உரையாற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே, “அவர்கள்(எதிர்க்கட்சிகள்) என்னை ஆட்சியில் இருந்து நீக்க வெளிநாட்டுப் படைகளுடன் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஐரோப்பா சென்று அவர்களை சந்திக்கின்றனர். அவர்கள் புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.” என்றார்.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு  ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதில், 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், லக்சம்பர்க் நாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு விசாரித்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடையை நீக்கி கடந்த 16-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ராஜபக்சே “ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியுள்ளது. இலங்கை எதிர்க்கட்சி தலைவர்கள், புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய 2 வாரங்களில் இது நடந்துள்ளது”. என்று கூறியுள்ளார்.

ஒருபுறம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள அவர்கள் இலங்கையின் மீன் ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் இலங்கையில் இருந்து மீன்ஏற்றுமதி செய்ய தடைசெய்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இருந்து மீன் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடைவிதித்துள்ளது. சர்வதேச மீன்பிடி கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத காரணமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ஐரோப்பிய யூனியன் விவகாரத்தை, உள்நாட்டு அரசியலுடன் இணைக்க முயற்சி செய்கிறார்.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இலங்கை அப்பீல்



கொழும்பு, அக்.20



விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை விலக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை அப்பீல் செய்கிறது.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தடை விதித்தன.

இதில், 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், லக்சம்பர்க் நாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை அந்த கோர்ட்டு விசாரித்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடையை நீக்கி கடந்த 16-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி பிறப்பித்த உத்தரவு, 3 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும், ‘விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை, கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதுபற்றி 2 மாதங்களுக்குள் யோசனைகளை வழங்கலாம்’ என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, இலங்கை 2 மாதங்களில் அப்பீல் செய்ய முடியும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து அகற்றும் இந்த தீர்ப்பு, இலங்கையில் உள்ள ராஜபக்சே அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அது அப்பீல் செய்ய தீர்மானித்திருக்கிறது.

இதற்கிடையே, ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக தனது தூதர் ரோட்னி பெரைராவை இலங்கை ஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள ஸ்டிராஸ்பர்க் (கிழக்கு பிரான்ஸ்) நகருக்கு இன்று (திங்கட்கிழமை) அனுப்புகிறது. அங்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார். அப்போது அவர், விடுதலைப்புலிகளுக்கு எதிராக அங்குள்ள 2 முக்கிய குழுக்களான வெளியுறவு குழு, பாதுகாப்பு குழு ஆகியவற்றின் ஆதரவை பெற முயற்சி எடுப்பார் என தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அவர், ஐரோப்பிய கவுன்சிலின் ஆதரவையும் பெறுவதற்கு முயற்சிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

காவல் துறையில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு: மத்திய அரசு


புதுடில்லி: 20.10.2014

காவல்துறையில் 33 சதவீதம் என்ற அளவில் பெண் போலீசாரை அனைத்து மாநிலங்களிலும் தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

புது டில்லியில் இந்திய பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பின் நிறுவன நாள் விழா நேற்று நடந்தது.இவ்விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.இப்போதைய சூழலில், துணை ராணுவப் படைகளில் 1.99 சதவீதம் மட்டுமே பெண்கள் பணிபுரிகின்றனர்.இந்த அளவினை 10 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அனைத்து மாநிலங்களின் காவல்துறையிலும், மத்திய ஆயுதப்படைப் பிரிவிலும் 33 சதவீதம் அளவில் பெண் போலீசாரை நியமிக்க வேண்டும்.இதுதொடர்பான அறிவிக்கை, மத்திய அரசு மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கனமழை புதன்கிழமை வரை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



தமிழகத்தில் பெய்து வரும் கனமழை, புதன் கிழமை வரை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகல் நேரத்தில் பெய்த கனமழை, இரவிலும் தொடர்ந்தது.

வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, புதன் கிழமை வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை - (அரியலூர்,கரூர்,விழுப்பரம்,தி.மலை ...)



அரியலூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டம் : பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


விழுப்புரம் மாவட்டம் : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



புதுக்கோட்டை  மாவட்டம் : பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


திருவண்ணாமலை   மாவட்டம் : பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கோவை, ஈரோடு, தூத்துக்குடி  மாவட்டம் : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


நெல்லை  மாவட்டம் : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும்  நாளையும்  விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர்  மாவட்டம் : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


திருப்பூர், கடலூர்  மாவட்டம் : பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

அரியலூரில் வாகன விதிமுறைகளை மீறிய 58 பேர் மீது வழக்குப்பதிவு


அரியலூர்:19.10.2014


அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி யதாக 12 பேர் மீதும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக 10பேர் மீதும், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 4 பேர் மீதும், செல்போன் பேசி கொண்டு வாக னம் ஓட்டியதாக 3 பேர் மீதும், அதிக வேகமாக சென்றதாக 2 பேர் மீதும், அதிக உயர பாரம் ஏற்றியதாக 5 பேர் மீதும், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததாக 2 பேர் மீதும் உள்பட மொத்தம் 58 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.

கோயம்புத்தூர், கடலூர் - பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர், கடலூர்  மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

தங்கம் கடத்தல்: விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்


தங்கக் கடத்தலை தடுக்க நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் தங்கக் கடத்தல் அதிகரிக்க வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் தங்கக் கடத்தல் 3 மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இதை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக உள்ளது.

அரியலூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.


அரியலூர் : 19.10.2014


அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, கலெக்டர் சரவண வேல்ராஜ் பேசியதாவது: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிகளில் வெளியிடப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியல்படி மொத்தம், 4,72,689 வாக்காளர்கள் உள்ளனர். அரியலூர் சட்டசபை தொகுதியின் மொத்த வாக்காளர்கள், 2,34,810. இதில், ஆண் வாக்காளர்கள், 1,17,304. பெண் வாக்காளர்கள், 1,17,506. ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள், 2,37,879. இதில், ஆண் வாக்காளர்கள், 1,18,826. பெண் வாக்காளர்கள், 1,19,053. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்கள், நவம்பர், 10ம் தேதி வரை, உதவி கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் அதற்கான படிவத்தை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம். வரும், 17 மற்றும், 30 தேதிகளில் இதற்கான சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. அக்டோபர், 26 மற்றும் நவம்பர், 2ம் தேதிகளில், சம்பந்தப்பட்ட வாக்குசாவடி அமைவிடங்களில், சிறப்பு திருத்த முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, டி.ஆர்.ஓ., ரவீந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சடையப்ப விநாயகமூர்த்தி, தேர்தல் தாசில்தார் ராமன், அரியலூர் தாசில்தார் வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி கடிதம்




அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து மத்திய மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

 பெங்களூரு சிறையிலிருந்து ஜாமீனில் ஜெயலலிதா சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

 இந்த நிலையில், மத்திய மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

 உங்களது நிலைக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு எனது அனுதாபமும், ஆதரவும் உண்டு. உங்களது துயரத்தைக் குறைப்பதற்காக நான் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால், அதை மகிழ்ச்சியோடு செய்வேன்.

 உங்களது வாழ்க்கையில் பெரிய துயரங்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம், ஒழுக்கம், துணிவு ஆகியவற்றின் மூலம் நீங்கள் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள்.

 இந்தச் சோதனையான காலக்கட்டம் விரைவில் நீங்கி, நீங்கள் மீண்டும் மாநிலத்தின் நிர்வாகத் தலைமையை ஏற்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழ்நாட்டிற்காக பல சாதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களது உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். நாடு முழுவதும் உங்களது அபிமானிகள் நிறைய பேர் உள்ளனர் என்பதை நினைவில் வைத்திருங்கள் என அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

ஜெயலலிதா ஜாமினில் விடுதலை : கருணாநிதி விளக்கம்





ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, தாம் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடையவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முக்கியமான வழக்கு என்பதால், தீர்ப்பு முழுவதையும் படித்த பிறகு கருத்து தெரிவிக்கலாம் என பொறுமையாக இருந்ததாக கூறியுள்ளார். 

அதேநேரத்தில், ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காக தாம் மகிழ்ச்சி அடையவும் இல்லை என்றும் தற்போது அவர் நிபந்தனை ஜாமினில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் இல்லை எனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து - கடிதம் இணைப்பு


உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேற்று சென்னை திரும்பிய அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதாவின் நலம் விரும்பி தமிழகம் முழுக்க, வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் கடந்த மூன்று வாரங்களாகவே நடந்து வருகின்றன.

இந்நிலையில், செல்வி.ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில்…

“மீண்டும் உங்களை போயஸ் கார்டனில் கண்டதில் மகிழ்கிறேன்.
உங்களின் நலனுக்காக பிரார்த்திப்பதுடன், வளத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் வாழ்த்துகிறேன்…” என்று கூறி தீபாவளிக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார் ரஜினி.


இந்தக் கடித விளக்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து கடிதம் மூலம் மீடியாக்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
அதன் நகல் கீழே…




இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு



தமிழ்நாடு–புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சென்னையில் பலத்த மழை பெய்ததால் ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இன்று காலை வரை மீனம்பாக்கத்தில் 74 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 52 மி.மீ மழையும் பெய்துள்ளது.

வண்ணராப்பேட்டை, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், ராயபுரம், சாந்தோம், மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், வடபழனி, போரூர், குன்றத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் வெள்ளக்காடாக உள்ளது.

இந்த கனமழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–

தமிழகம் மற்றும் இலங்கை இடையே தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு – புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்கிறது.

இந்த நிலையில் அரபிக் கடலில் லட்சத்தீவு–கோவா இடையே இன்னொரு காற்றழுத்த தாழ்வு (ஸ்டிரப்) உருவாகி இருப்பதால் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையும் தொடங்கியதன் காரணமாக மேக கூட்டங்கள் கலையாமல் அப்படியே நிற்பதால் மழை இடைவிடாது பெய்கிறது.

தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வடதமிழகம் புதுச்சேரியில் அனேக இடங்களிலும் மழை பெய்யும். சில பகுதிகளில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும்.

அதிகபட்சமாக திருப்பூண்டியில் 14 சென்டிமீட்டர் மழையும், காரைக்காலில் 11 செ.மீட்டரும் மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

ஜெ.விற்காக மரணம் அடைந்த 193 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு



அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

“அ.தி.முக. என்னும் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்” என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். என்னிடம் பெற்றுக் கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அந்தப் பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும்.

அ.தி.மு.க.வின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனது தலைமைக் கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்தப் பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களைப் பற்றியோ, துயரங்களைப் பற்றியோ, சோதனைகளைப் பற்றியோ, வேதனைகளைப் பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்தத் துயரங்கள் ஏற்படுத்துகின்ற வலி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்கிக் கொள்கின்ற மனப் பக்குவத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.

அ.தி.மு.க உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் என்றைக்கும் நான் உழைப்பேன்; எந்தத் தியாகத்தையும் மேற்கொள்வேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை நான் சந்தித்து வந்திருக்கிறேன். அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். உங்கள் அன்பும், தமிழக மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கும் வரையில் எதைக் கண்டும் நான் அஞ்சப் போவதில்லை; மனம் தளரப்போவதில்லை.

தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைப் பார்த்து உள்ளம் வெதும்பி, நான் சந்திக்கும் துயரங்களைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல், என் மீது மிகுந்த பேரன்பு கொண்டுள்ள தாய்மார்கள்; பொதுமக்கள்; கழக உடன்பிறப்புகள்; குறிப்பாக, என் இதயத்தின் ஆழத்தில் வேர் விட்டிருக்கும் மாணவச் செல்வங்கள் என மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்ற துயரச் செய்தி கேட்டும்; மேலும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும் தாங்கொணா வேதனை அடைகிறேன். இந்தச் செய்தி எனக்கு மிகுந்த மன வலியைத் தருகிறது.

எனக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மரணமடைந்த 193 பேர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு; மரணமடைந்தோர்களது குடும்பத்தினருக்கு அ.தி.மு.க.வின் சார்பில் தலா மூன்று லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதையும்; மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட சூழ் நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் பல்வேறு காரணங்களால் மரணமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. தன்னையே மாய்த்துக் கொள்ளும் இத்தகைய செயல்களில் இனி யாரும் ஈடுபடக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் மீது பேரன்பு கொண்டுள்ள பல லட்சக் கணக்கான தாய்மார்களும், பொது மக்களும், ஆதரவாளர்களும், தோழமைக் கட்சியினரும், மாணவ, மாணவியர்களும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளும், நான் சோதனையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக திருக்கோயில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும், பிற இடங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்துள்ள விவரங்களையும், நேர்த்திக் கடன் செலுத்தியுள்ள விவரங்களையும் அறிந்து நெகிழ்ச்சி அடைகிறேன். என் மீது பாசமும், பற்றும் கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

'கத்தி' திரையிடக் கூடாது! - திருமாவளவன் எச்சரிக்கை



விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கத்தி' படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில், தயாராகி இருக்கும் படம் 'கத்தி'. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் தான் லைக்கா என்று படம் ஆரம்பித்ததில் இருந்து சர்ச்சைகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. படம் முடிவு பெறும் தருவாயில், இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் கூறியிருப்பது, "நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'கத்தி' திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாகத் தெரிய வருகிறது. இத்திரைப்படம் லைக்கா மொபைல் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் என்பவர் தமிழீழத்தைச் சேர்ந்தவர். ஐரோப்பா உள்ளிட்ட புலம்பெயர்ந்த நாடுகளில் உலகத் தமிழர்களுக்கிடையே இந்நிறுவனம் சிம் கார்டு உற்பத்தியில் புலம்பெயர்ந்து விளங்குகிறது. தற்போது தமிழகத் திரைத் துறையில் அடியெடுத்து வைத்துள்ள இந்நிறுவனம் உலகத் தமிழர்களிடையே கடும் விமர்சனத்துக்கு’ள்ளாகியுள்ளது. ஏனென்னில், லைகா மொபைல் உரிமையாளரும், ராஜபக்சே மகனும் இணைந்து தொழில் செய்து வருவதாக தமிழ்ச் சமூகத்தினரிடையே வலுவான கருத்து பரவியுள்ளது.

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவோடு தொழில்ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன் தமிழ் திரையுலகில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் அய்யத்தை உருவாக்கியுள்ளது. ராஜபக்சே திட்டமிட்டு திரையுலகத்தின் மூலம் தமிழக அரசியலில் ஊடுருவ முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் இளைய தலைமுறையினர் சிங்கள இனவெறிக்கு எதிராக அணி திரண்டுவிடக் கூடாது என்றும், இளைஞர்களின் போர்க் குணத்தை மழுங்கச் செய்யும் வகையிலும், ராஜபக்சே திட்டமிட்டு திரைத்துறையின் மூலம் ஊடுருவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தான், 'கத்தி' திரைப்படத்திற்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பாக அணி திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அக்கூட்டமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பு இயக்கமாக இடம்பெறவில்லை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒத்துழைப்பு எனும் அடிப்படையில், அக்கூட்டமைப்பு கடந்த செப்டம்பர் 24 அன்று நடத்திய பேரணியில் கலந்து கொண்டது. அத்துடன், 'கத்தி' திரைப்படத்திற்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்று சந்தேகத்திற்குல்ளாகியிருக்கிற லைகா நிறுவனத் தயாரிப்பில் 'கத்தி' திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது என்னும் கோரிக்கையை விடுதைச் சிறுத்தைகளும் வலியுறுத்துகிறது. இது, நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை ஆகாது. ராஜபக்சேவுக்கு எதிரான கோரிக்கை என்பதை புரிந்துகொண்டு திரைப்பட வெளியீட்டாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் 'கத்தி' திரைப்படத்திற்கு எதிரான எமது கோரிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்ல வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் சார்ப்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்." என்று கூறியிருக்கிறார்.

Saturday 18 October 2014

அரியலூர் அருகே லாரிகள் சிறைபிடிப்பு




அரியலூர் மாவட்டம் இடையத்தான்குடியில் சுண்ணாம்புக் கல் ஏற்றிவந்த 30 லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இடையத்தான் குடி கிராமத்தில் உள்ள ஆலை ஒன்றில் இருந்து தனியார் சிமெண்ட் ஆலைக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சுண்ணாம்புக் கல் எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இடையத்தான்குடியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும், சாலைகள் பழுதடைவதாகவும் கூறி, பொது மக்கள் லாரிகளை சிறைபிடித்தனர்.


ஜெயலலிதா ஜாமினில் விடுதலை... காரில் புறப்பட்டார்.





சிறை வளாகத்தில் இருந்து ஜெ., சசிகலா ஒரே காரில் சிறையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.


ஜாமினில் விடுவிப்பதற்கான உத்தரவு நகல் அளிக்கப்பட்டுள்ளத்தையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து  அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று மாலைக்குள் ஜெயலலிதா சென்னை வந்தடைகிறார்.

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் ...



ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்திய ராணுவம் தரப்பில் உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

பூஞ்ச் மாவட்டத்தின் ஹமிர்பூரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், நேற்றிரவு 9 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தியத் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதால், ஒரு மணி நேரம் வரை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்தியத் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 3 நாட்களாக ஹமிர்பூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.


Friday 17 October 2014

போலீசார் அறிவிப்பு-விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்கும் விதிமுறைகள்


சென்னை:-சென்னையில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்கும் விதிமுறைகள் பற்றி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


* உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன் படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்குமேல் ஒளி எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.


* பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்க வேண்டாம். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் இடங்களின் அருகேயும், பெட்ரோல் நிலையங்கள் அருகேயும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசுகள் அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

* மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது.

* பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால், வெடியினால் டப்பாக்கள் தூக்கி வீசப்படலாம். அதனால் விபத்துகள் நேர வாய்ப்புள்ளது.

* குடிசை பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும், ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.

* எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

* ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்படியில் (சமையலறையில்) வைத்து உலர்த்தக்கூடாது.

* பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது.

* எந்த காரணத்தை கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வாணவெடிகளை அல்லது பட்டாசுகளை கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகை பிடிப்பதோ, சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.

* பட்டாசு விற்கும் கடைகள் அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

* பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ, பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகில் அல்லது கடையிலோ உபயோகிக்கக்கூடாது.

* பட்டாசுகளை போதுமான இடைவெளி விட்டு கொளுத்த வேண்டும்.

* கால்நடைகள் அருகில் பட்டாசுகளை வெடித்தல் கூடாது. ஏனெனில் அவை பயத்தின் காரணமாக மிரண்டு ஓடும்போது, வாகன ஓட்டுனர்கள் மீது மோதி விபத்து ஏற்படலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆன்-லைனில் பட்டாசு விற்பனை




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் பட்டாசு விற்பனை ஆன்-லைனில் நடைபெற்று வருகிறது.

தங்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை ஆன்-லைனில் வாங்குவதில் பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், தற்போது விருதுநகரில் ஆன்-லைனில் பட்டாசுகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு மட்டுமின்றி திருவிழா மற்றும் பல்வேறு விழாக்களுக்கு பட்டாசுகள் பயன்படுத்தப்படுவதால் ஆன்-லைனில் பட்டாசு வர்த்தகம் ஆண்டு முழுவதும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

விருதுநகரில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: 3 பேர் கைது


விருதுநகர் மாவட்டம் காரிச்சேரியில் , சீல் வைக்கப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரிச்சேரியில் ராமர் , முத்துராமன் ஆகியோருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையை ஆகஸ்ட் மாதம் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது ஆலையில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆலையின் பின்புறம் கிடங்கு அமைத்து ராமர் , முத்துராமன் ஆகியோர் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ராமர், முத்துராமன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆயினும், இவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்ததாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டு: சீன அதிகாரிக்கு கண்காணிப்புடன் கூடிய மரண தண்டனை


ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சீன ரயில்வேத் துறை மூத்த பொறியாளர் ஒருவருக்கு கண்காணிப்புடன் கூடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷங் ஷூகாங் என்ற அந்த அதிகாரி சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர் மீதான 13 குற்றச்சாட்டுகள் கடந்த மாதம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கண்காணிப்புடன் கூடிய மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, அதில் நீதித்துறைக்குத் திருப்தி இல்லையெனில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். ஊழல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ரயில்வே அமைச்சர் லியூ ஜியூன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர்.

ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு.


தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது. நாடு முழுவதும், 1.66 லட்சம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. அவற்றில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு 45 ஆயிரம் மையங்கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்., மைய பணப் பரிவர்த்தனைகளில், 41 சதவீதம் எஸ்.பி.ஐ., கார்டுதாரர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க, ஏ.டி.எம்., பயன்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. 

இதுகுறித்து, ஒரு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப்தாவது: எஸ்.பி.ஐ., வங்கிக் கிளைகளில் கணக்குவைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் மாதத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு கீழ்வைத்திருப்பவர்கள், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில், ஐந்து முறையும், பிறவங்கிகளின் ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்குமேல் ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டுமானால், ஒவ்வொரு முறைக்கும் ஐந்து முதல் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 
ஆனால், தங்கள் கணக்கில் குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு, மாதத்திற்கு 9 முறை ஏ.டி.எம்.,களிலும், நான்கு முறை வங்கியிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்தால், நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.,களில்கட்டணமின்றி, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை, நவ., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இவ்வாறு, அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

Sunday 5 October 2014

அவசர உதவிக்கு அலைபேசி எண்கள்...

உங்கள் தொலைபேசியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவசரத்தில் நமேக்கே தேவைப்படலாம்.


அக்.7ல் தனியார் பள்ளிகள் மூட முடிவு


சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்படும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ அறிவித்தார்.